பரபரப்பான பண்ருட்டி! இது லிஸ்டுலையே இல்லையே...கணவனால் சிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ..!

Feb 28, 2024 - 10:55
பரபரப்பான பண்ருட்டி! இது லிஸ்டுலையே இல்லையே...கணவனால் சிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ..!

பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சத்யா. இவரது கணவரான பன்னீர் செல்வம், கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது நகராட்சி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க விடுக்கப்பட்ட டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரூ.20 லட்சம் டெண்டர் மோசடியில் ஈடுபட்ட பன்னீர் செல்வத்திற்கு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உட்பட பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க :

https://kumudam.com/Santhan,-acquitted-in-the-Rajiv-murder-case,-passed-away

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow