பெங்களூரில் ஹோட்டலில் வெடித்த மர்ம பொருள்... 5 பேர் படுகாயம்...

பெங்களூருவில் ஹோட்டல் ஒன்றில் மர்ம பொருள் வெடித்ததில், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

Mar 1, 2024 - 15:45
பெங்களூரில் ஹோட்டலில் வெடித்த மர்ம பொருள்... 5 பேர் படுகாயம்...

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, இந்திரா நகரில் ராமேஸ்வரம் கஃபே என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று (01.03.2024) திடீரென அக்கடையில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீ மேற்கொண்டு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

முன்னதாக பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெடித்தது சிலிண்டரா? அல்லது யாரேனும் குண்டு வைத்தார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow