பிரேசிலில் 80 ஆண்டுகளில் இல்லாத பெருமழை - இவ்வளவு பேர் பலியா?

பிரேசிலின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கிய நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

May 5, 2024 - 10:22
பிரேசிலில் 80 ஆண்டுகளில் இல்லாத பெருமழை - இவ்வளவு பேர் பலியா?

தென்அமெரிக்க நாடான பிரேசிலின் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ரியோ கிராண்ட் டூ சுல் என்ற மாநிலம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 69,000 மக்கள் இந்த மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளில் தங்களின் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். 

குறிப்பாக கிராண்ட் நகரத்தின் 3ல் 2 பகுதி மழையில் மூழ்கியிருக்கும் செய்தி பிரேசில் மட்டுமின்றி உலக நாடுகளின் மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த மழையின் போது 56 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் 74 பேருக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

நகரின் முக்கிய இணைப்பு சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து முதலுதவி நிவாரணங்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமான போக்குவரத்தும் தடை பட்டுள்ளது. தற்போது விரைவாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மாநில ஆளுநர் எடூரா தெரிவித்திருக்கிறார். ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த அதிபர் லூலா டெ சில்வா, மழை எதிர்பார்த்த ஒன்று தான் ஆனால் அளவு மிகப்பெரியதாக இருந்ததே பாதிப்புக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த மழை பாதிப்புகள் பிரேசிலின் அண்டை நாடுகளான அர்ஜென்டினா, உருகுவே நகரங்களிலும் எதிரொலித்துள்ளது. அங்கேயும் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்அமெரிக்க நாடுகளில் கடந்த 80 ஆண்டுகளில் இப்படியொரு பெருமழை பெய்யவில்லை, இதனால் இது பெரிய பாதிப்பாகவே பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow