ஐதராபாத் புல்லட் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி... பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புல்லட் பைக் நடு சாலையில் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

May 15, 2024 - 22:04
ஐதராபாத் புல்லட் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி... பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

ஐதராபாத்தை அடுத்த முகல்புராவில் கடந்த 12-ம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் பைக் ஒன்று திடீரென்று தீப்பிடித்தது. அதில் பயணித்த இருவர் வண்டியை நிறுத்த முயன்றனர். மேலும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் வண்டியின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் பைக் வெடித்தது. இதனால் அதற்கு அருகில் இருந்த 2 காவலர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

தீக்காயம் அடைந்தவர்கள் விரைந்து மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், கடந்த 15-ம் தேதி சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பைக் வெடித்த விபத்தின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ள மற்ற 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow