“எங்களுக்கு கரும்பலகை வேண்டாம்..! கழிவறை வேண்டும்” - த.வெ.க. நிர்வாகிகளிடம் முறையிட்ட அரசு பள்ளி மாணவி

“ஆண்களும், பெண்களும் ஒரே கழிவறை தான் பயன்படுத்துகிறோம்”

Feb 8, 2024 - 02:22
Feb 8, 2024 - 02:44
“எங்களுக்கு  கரும்பலகை வேண்டாம்..! கழிவறை வேண்டும்”  - த.வெ.க.  நிர்வாகிகளிடம்  முறையிட்ட அரசு பள்ளி  மாணவி

பள்ளியில் கருப்பு போர்டு வேண்டாம்; பச்சை நிறத்தில் மாற்றி தாருங்கள் என  தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் பள்ளி மாணவி கோரிக்கை விடுத்துள்ளார். 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை அண்மையில் தொடங்கினார். இதனால் தமிழகம் முழுவதும் உற்சாகம் அடைந்துள்ள அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர். 

அந்த வகையில் மயிலாடுதுறை ஒன்றியம் கீழ ஆத்துக்குடி கிராமத்தில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 100 பேருக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை தமிழக வெற்றிக்கு கழகத்தினர் இன்று தொடங்கினர். இதில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் குட்டிகோபி கலந்து கொண்டு மாணவ மாணவிகள் 100 பேருக்கு இனிப்பு, சுண்டல், முட்டை மற்றும் பால் ஆகிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியின் முடிவில்,  அந்த பள்ளி மாணவி ஒருவர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் பள்ளியில் உள்ள கரும்பலகையை மாற்றி "பளிச்" என தெரியும் வகையில் பச்சை நிறத்தில் மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.