கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு தகவல்... தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைதான்...

Apr 7, 2024 - 16:56
கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு தகவல்... தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைதான்...

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 ஃபேரன்ஹீட்டும், கரூரில் 104 ஃபேரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. மேலும், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக 102 முதல் 104 ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 100.7 ஃபேரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 96 ஃபேரன்ஹீட்டும் வெப்பமும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மக்களுக்கு குளிர்ச்சி தரும் தகவலை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. 

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில நாட்களாகவே மிதமான மழை பெய்து வருகிறது. மழை பொழிவு மேலும் 6 நாட்களுக்கு நீடிக்கும் என்ற தகவல் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow