தமிழ்நாட்டில் இனி திமுக இருக்காது...பிரதமர் மோடி சபதம்...

Feb 28, 2024 - 13:49
தமிழ்நாட்டில் இனி திமுக இருக்காது...பிரதமர் மோடி சபதம்...

திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் மோடி, திமுக மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் குலசேரப்படினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுக குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், "திமுக பொய் வேஷம் போடுகிறது. திமுக பிரித்து ஆளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. இதையெல்லாம் நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆனால் இனிமேல் திமுகவை பார்க்க முடியாது, திமுக இருக்காது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்து விட்டார், உங்களுடன் அண்ணாமலை இருக்கிறார். காசு பணம் சம்பாதிக்க உங்கள் நம்பிக்கை, மொழி என அனைத்தையும் சிறுபான்மைப்படுத்தி, கேவலப்படுத்தி வரும் திமுக முற்றிலுமாக இங்கிருந்து அகற்றப்படும். குடும்பத்திற்காகவும் வாரிசுகளுக்காகவும் அரசியல் செய்யும் திமுகவை இனிமேல் நீங்கள் தேடினாலும்  கிடைக்காது. திமுக - காங்கிரஸ் கட்சிகள் அகற்றப்பட வேண்டிய கட்சிகள். இன்று திறக்கப்பட்ட ராக்கெட் ஏவுதளத்திற்கான திமுகவின் விளம்பரத்தில், சீனாவின் கொடியும் ராக்கெட்டும் உள்ளது. அந்த அளவிற்கு தான் திமுகவின் நாட்டுப் பற்று உள்ளது. இந்தியாவின் மீது அவர்களுக்கு என்ன பற்று இருக்கின்றது என்பதை நீங்கள் உணர வேண்டும். 

தமிழ்நாட்டிற்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள்.  தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோயில்களுக்கெல்லாம் சென்று அந்த ஆசீர்வாதத்தோடு நான் அயோத்தியில் ராமர் கோயிலை திறந்தேன். இதனால் மொத்த தேசமும் மகிழ்ச்சி அடைந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வரும்போது தமிழகத்தின் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள். அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இதன் மூலம் என்ன நிரூபிக்கிறார்கள் என்றால் உங்களுடைய நம்பிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று நிரூபிக்கிறார்கள். அவர்கள் வெறுப்பு அரசியலை பரப்புகிறார்கள்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Hidden-central-government-projects%E2%80%A6-Prime-Minister-Modi-accused

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow