வாழைக்காயை பூ போல எடுத்து.. மாவில் தடவி.. சுடச்சுட பஜ்ஜி போட்ட ஓ.பன்னீர் செல்வம்
மக்களவைத் தேர்தல் களம் படு பரபரப்பாக உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளதால் வேட்பாளர்கள் பங்குனி மாத வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் களம் படு பரபரப்பாக உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளதால் வேட்பாளர்கள் பங்குனி மாத வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஓ. பன்னீர்செல்வத்திற்கு இரட்டை இலை சின்னம் இல்லையே என்ற ஆதங்கம் உள்ளது. பலாப்பழம் சின்னம் ஒதுக்கினாலும் அவரது மனதிலும் புத்தியிலும் இரட்டை இலை சின்னமே பதிந்துள்ளது. பலாப்பழத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக பழக்க தோஷத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பின்னர் அவரே அதை திருத்திக்கொள்கிறார்.
வெயில் காலமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் காலை நேரத்திலேயே பிரச்சாரத்திற்கு கிளம்பி விடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். ஜூஸ் கடைக்குப் போய் அங்கே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்து சென்ற இடம் கடை. ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன் வயல் என்ற ஊரில் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு தேநீர் கடையில் வாக்கு சேகரித்தார் ஓ.பன்னீர் செல்வம்.
அந்த கடையில் பணிபுரியும் பணியாளர் பஜ்ஜி போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ஓ பன்னீர்செல்வம், 'நானும் பஜ்ஜி போடுகிறேன்' எனக்கு கூறி அவரிடமிருந்து சீவப்பட்ட வாழக்காய் துண்டுகளை கையில் வாங்கினார்.
அந்த வாழைக்காய்களை பூ போல கடலை மாவில் தடவி எடுத்து அடுப்பில் வடை சட்டியில் காய்ந்து கொண்டிருந்த எண்ணெயில் பதமாக போட்டு பஜ்ஜி சுட்டார் ஓ.பன்னீர் செல்வம். பெரியகுளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கற்றுக்கொண்ட அனுபவம் தற்போது கை கொடுத்தது. ஓ.பன்னீர் செல்வம் பஜ்ஜி சுட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.
பஜ்ஜி ஒரு பக்கம் சுட்டாலும் கூடவே மக்களவைத் தேர்தலில் தனக்கு வழங்கப்பட்டுள்ள 'பலாப்பழம்' சின்னத்தை குறிப்பிட்டு தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
What's Your Reaction?