பூதாகரமாகும் பிரதமரின் ரோடு ஷோ... பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை...
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய சாலைப் பேரணியில், மாணவர்கள் கலந்து கொண்ட விவகாரம் தொடர்பாக பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை சாய்பாபா காலனியிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரை நேற்று (மார்ச் 18) பிரதமரின் வாகன பேரணி நடைபெற்றது. சுமார், 2.5 கிமீ தூரம் நடைபெற்ற பேரணியில், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். தேர்தல் பிரசாரம் போன்ற செயல்பாடுகளுக்குக் குழந்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்பதால் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு, தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார். மேலும், சம்பவத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆட்சியரின் உத்தரவுப்படி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் புனிதா, அந்தோணியம்மாள், மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியை புகழ்வடிவு மற்றும் மற்றும் மாணவிகள், ஆசிரியர்களிடம் 2 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அதன் பின் தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவிகளின் விளக்கத்தை எழுத்துப்பூர்வாக எழுதி வாங்கி விட்டு அதிகாரிகள் சென்றனர்.
What's Your Reaction?