இன்னும் 65 நாட்கள் மட்டும்தான்.. இந்து விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள்..! கொந்தளித்த எச்.ராஜா..!

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிற இந்து விரோத ஆட்சிக்கு இன்னும் 65 நாட்களில் மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

Feb 21, 2024 - 11:35
இன்னும் 65 நாட்கள் மட்டும்தான்.. இந்து விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள்..! கொந்தளித்த எச்.ராஜா..!

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிற இந்து விரோத ஆட்சிக்கு இன்னும் 65 நாட்களில் மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். 

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"திமுக அரசு இந்து மக்களை வஞ்சித்து வருகிறது. இந்து விரோத அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருக்கும் வரை இந்து மக்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது. கிறிஸ்துவ கைக்கூலியாக செயல்படும் உதயநிதி ஸ்டாலின் அல்லேலூயா என்ற கூவிக்கொண்டு திரிகிறார்.

இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இருந்து வரக்கூடிய வருமானத்தை திராவிட மாடல் அரசு கொள்ளையடித்து வருகிறது. திராவிட மாடல் அரசு என்பதற்கு பதில் கொள்ளை அரசு என்று பெயர் வைத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு அல்லேலுயா என்று கோசம் அடிக்கிறார். 

இந்து விரோத கோயில் கொள்ளையர்களிடம் தமிழ்நாடு சிக்கி உள்ளது. ஊழல் தடுப்பு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது? சிலை கடத்துபவர்களை பிடிக்கிறதா? சிலை கடத்தவர்களை தண்டிக்கிறதா? இந்து கோயில்களின் சொத்துக்களை அபகரிக்கக் கூடிய அரசு தான் இந்த திமுக அரசு.

65 நாட்களில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்து மக்களை வஞ்சித்து வருகிற திமுக ஊழல் அரசு, அல்லேலூயா துதி பாடும் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோருக்கு கண்டிப்பாக தமிழக மக்கள் பதில் சொல்லுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார், எத்தனை தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர்கள்  பின்னர் அறிவிப்பார்கள். தேனி தொகுதியில் யார் போட்டியிடுவார் எனபதை பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும், நான் சொல்ல முடியாது." இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

மேலும் படிக்க :

https://kumudam.com/RK-Suresh-Brother-NTK-Candidates-1256

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow