திட்டக்குடி அருகே கார்கள் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த கார்கள் மீது மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திட்டக்குடி அருகே கார்கள் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
Cars collide head-on with government bus near Thittakudi

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று, திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையில் தடுப்புச் சுவரை தாண்டி எதிர்திசையில் சென்றுள்ளது.

அப்போது எந்த வழியே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அந்த கார்களில் இருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,  தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கார்களில் சிக்கிய உடல்களையும், காயமடைந்தவர்களையும் அதிகாரிகள் மீட்டனர். இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திட்டக்குடி விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow