டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கர்நாடக இசை கலைஞர்கள்... பெரியார் காரணமா?

பெரியாரை போற்றிய டி.எம்.கிருஷ்ணாவிற்கு விருது வழங்கும் மியூசிக் அகாடமியில் இருந்து தாங்கள் விலகுவதாக பிரபல கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி அறிவித்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. 

Mar 21, 2024 - 08:13
Mar 21, 2024 - 08:14
டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கர்நாடக இசை கலைஞர்கள்... பெரியார் காரணமா?

பெரியாரை போற்றிய டி.எம்.கிருஷ்ணாவிற்கு விருது வழங்கும் மியூசிக் அகாடமியில் இருந்து தாங்கள் விலகுவதாக பிரபல கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி அறிவித்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. 

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ’சங்கீத கலாநிதி’ விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், இந்தாண்டு நடைபெறும் மியூசிக் அகாடமியின் 98 ஆவது ஆண்டு மாநாட்டை ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வாகியுள்ள டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குவார்.

இந்நிலையில், டி.எம்.கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டதை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ளனர் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான ரஞ்சனி – காயத்ரி.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், 2024 ஆம் ஆண்டு டிஎம் கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் மியூசிக் அகாடமியின் மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, டி.எம்.கிருஷ்ணா ’கர்நாடக இசை உலகிற்கு பெரும் சேதத்தை’ ஏற்படுத்தியதாகவும், வேண்டுமென்றே மகிழ்ச்சியுடன் இசை சமூகத்தின் உணர்வுகளை மிதித்து தள்ளுவதாகவும் ரஞ்சனி – காயத்ரி குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும், தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய ஆளுமைகளை டி.எம்.கிருஷ்ணா அவமதித்ததாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், கர்நாடக இசைக்கலைஞராக இருப்பது அவமானகரமானது என்ற உணர்வைப் பரப்ப முயற்சித்ததாகவும் ரஞ்சனி காயத்ரி தங்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, டி.எம்.கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தை இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், ’பெரியார்’ போன்ற ஒரு நபரை அவர் புகழ்வது ஆபத்தானது என்று கூறிய அவர்கள், ஈ.வெ.ரா பிராமணர்களுக்கு எதிராக இனப்படுகொலையை வெளிப்படையாக முன்மொழிந்ததாகவும், இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் "இழிவான தகாத வார்த்தைகளால்" பலமுறை அழைத்து/துஷ்பிரயோகம் செய்ததாகவும், சமூக உரையாடலில் இழிவான மொழியை இயல்பாக்கியதாவும் விமர்சித்துள்ளனர்.

இறுதியாக, கலை மற்றும் கலைஞர்கள், வாக்கியக்காரர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், வேர்கள் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பிற்குரிய அமைப்பை தாங்கள் நம்புவதாகவும், இந்த விழுமியங்களைப் புதைத்துவிட்டு மாநாட்டில் சேர்வது அவர்களுக்கு தார்மீக மீறலாகும் என்று தெரிவித்துள்ளனர். 

டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக உலக புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்களான ரஞ்சனி காய்த்ரி போர்க்கொடி தூக்கியுள்ளது கர்நாடக இசை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Files

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow