”இந்தியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்துங்க..”  -முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

இந்தி மொழியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை மத்திய அரசு நிறுத்தவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Oct 18, 2024 - 16:42
”இந்தியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்துங்க..”  -முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சித் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பிரதமர் மோடி நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை. 

பன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும்.

இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow