பணமுகம் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த ஆற்றுவெள்ளம்
சுற்றுவட்டார பகுதிகளுக்குள் ஆற்றுவெள்ளம் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பணமுகம் பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி சுமார் பத்தாயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம் செய்யபட்டு வரப்படுகிறது.இதனால் தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிகளான அதங்கோடு, மங்காடு, பணமுகம்,பள்ளிக்கல்,வைக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஆற்றுத்தண்ணீர் புகுந்து பலத்த சேதங்களை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் பணமுகம் பகுதியின் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் ஆற்றுவெள்ளம் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.இதனால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
தீ அணைப்பு துறையினர் படகு மூலம் பொதுமக்களை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.இந்த நிலையில் ஒரு சில இளைஞர்கள் தண்ணீரின் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நீச்சலடித்து குளித்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.ஆற்றுவெள்ளம் புகுந்து பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து இன்றும் மழை நீடித்தால் இந்த பகுதிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?