அமைதி ஒப்பந்தம்:  ஈரான் மெசேஜ்க்கு காத்திருக்கும் அதிபர் டிரம்ப் 

அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடம் இருந்து இன்று இரவு தகவல் வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் காத்து கொண்டு இருக்கிறார். 

அமைதி ஒப்பந்தம்:  ஈரான் மெசேஜ்க்கு காத்திருக்கும் அதிபர் டிரம்ப் 
ஈரான் மெசேஜ்க்கு காத்திருக்கும் அதிபர் டிரம்ப் 

ஈரான் - அமெரிக்கா இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டது. மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கு அமைதி ஒப்பந்த திட்டத்தை அமெரிக்கா பாகிஸ்தான் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்து இருந்தது.

கடந்த ஒரு மாதமாக அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தில், ஹோர்முஸ் நீரிணையையொட்டி கடந்த ஒரு நாளில் பதிவான இந்த மோதல் சம்பவங்கள் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.

இத்தடையை மீறி ஈரான் துறைமுகத்துக்குள் நுழைய முயன்ற 2 கப்பல்களை அமெரிக்கா தாக்கியுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் 3 போர்க்கப்பல்கள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், அவை சேதமின்றி அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிறைய வேதனை பட வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நிருபரிடம் தொலைபேசியில் அழைத்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் தொடர்பாக கூறுகையில், ' இன்றிரவிற்குள்' ஈரானிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்க்கிறேன், ஈரான் வேண்டுமென்றே அமைதி ஒப்பந்தத்தை தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான பதில் 'விரைவில் தெரிந்துவிடும்' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow