நீ ஒரு பைத்தியம், ஜெயில இருந்திருப்பா: நெதன்யாகுவை போனில் திட்டிய டிரம்ப்
நீ ஒரு பைத்தியம், நான் உன்னை காப்பாற்றி கொண்டு இருக்கிறேன். இல்லையென்றால் நீ ஜெயில இருந்திருப்பா என நெதன்யாகுவை டிரம்ப் போனில் திட்டியதாக செய்தி வேகமாக பரவி வருகிறது.
ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதே போன்று அமெரிக்கா முன்னிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இஸ்ரேல், லெபனான் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை மீறி லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் மீது கடும் கோபம் அடைந்த டிரம்ப். இஸ்ரேல் பிரதமர் தென்யாகுவை போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
டிரம்ப் கடும் கோபத்துடன் நெதன்யாகுவிடம் பேசியதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். ”நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால், நீங்கள் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பீர்கள். நான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது அனைவரும் உங்களை வெறுக்கிறார்கள். இதன் காரணமாகவே, இஸ்ரேலையும் அனைவரையும் வெறுக்கிறார்கள்” என டிரம்ப் நெதன்யாகுவை கடுமையாக திட்டியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்த தொலைப்பேசி உரையாடலுக்குப் பிறகு, "அனைத்துவிதமான தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்றும், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவைத் தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள் என்றும்” டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து டிரம்ப்புடனான போனில் பேசியதை உறுதி செய்த நெதன்யாகு, எங்களின் இந்த நிலைப்பாடு மாறவில்லை. அதே சமயம், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படும்” என கூறியுள்ளார். நெதன்யாகுவின் இந்த பதிவு டிரம்ப் மேலும் கோபம் அடைய செய்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?