கொதிக்கும் கோடை காலம்.. மாணவர்களின் நலன் காக்க என்ன செய்யலாம்.. என்ன செய்யக்கூடாது

கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் அதிக வெயில் உள்ள நேரங்களில், மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றைத் திறந்தவெளியில் நடத்துதல் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Apr 13, 2024 - 13:15
கொதிக்கும் கோடை காலம்.. மாணவர்களின் நலன் காக்க என்ன செய்யலாம்.. என்ன செய்யக்கூடாது

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வருகிறது. கேரளாவில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க விழிப்புணர்வு மணி அடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்துப் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளும் நடத்துவார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்காக பள்ளி கல்வித்துறை மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ள. 

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, நேரடி வெயில் படும் திறந்தவெளியினை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடல் வேண்டும். இந்த நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றைத் திறந்தவெளியில் நடத்துதல் கூடாது.

மாணவர்கள் தண்ணீர் தேவையான அளவு பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பாடவேளை துவக்கத்தின் போதும் மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்புகள் வழங்க வேண்டும்

எலுமிச்சைச் சாறு, நீர்மோர், லஸ்ஸி, பழச்சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகலாம். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக நீர்ச் சத்து அதிகம் நிறைந்த பழ வகைகளான தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு பழம், திராட்சை, அன்னாசி, வெள்ளரி, கீரைகள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம்.

பள்ளியில் தேவையான ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் முதலுதவி பெட்டகத்தினை தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.  மாணவர்களுக்குத் தட்டம்மை (Measles), )  சளி, காய்ச்சல் இருந்தால்  மருத்துவமனையில்  சிகிச்சை மேற்கொள்ளக் வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow