மீண்டும் உயரே பறக்கும் தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை இன்றைய தினம் சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ. 53,840க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்த தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
தங்கம் மிகச்சிறந்த முதலீடு என்பதால் இந்தியர்கள் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
50 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் மாதத்தில் ரூ.54,000த்தை தாண்டியது. ஏப்ரல் 19ஆம் தேதி உச்சம் தொட்டது தங்கம் விலை.
22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 55,120 ஆக விற்பனையானது. இதனால் நகையை வாங்குபவர்கள் கலக்கமடைந்தனர். கடந்த 20ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இன்று ஏப்ரல் 24ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,730 க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,513க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,104க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?