மன்சூர் அலிகானுக்கு -சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்பதை மன்சூர் அலிகானுக்கு தெரிவிக்க வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

Dec 11, 2023 - 15:51
Dec 11, 2023 - 17:59
மன்சூர் அலிகானுக்கு -சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

சமூக வலைதளங்களால் இளைஞர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது.அதனால், பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பதை மன்சூர் அலிகான் தெரிந்து கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
கடந்த நவம்பர் 11ம் தேதி தமிழக அரசியலின் முக்கிய விசயங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், “திரைப்பட போஸ்டர்களில் ஆண் நாயகர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பெண் நாயகிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என கருத்து தெரிவித்தார்.திரைப்பட நடிகை திரிஷா கிருஷ்ணன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. 

தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர் பாலியல் அவதூறு மற்றும் திட்டமிட்டு அவதூறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.இந்த வழக்கில் நவ 23ம் தேதி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரிய நிலையல், நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கருத்து தெரிவித்திருப்பதால் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும்,அவதூறாக சமூக வலைதளங்களுல் கருத்து தெரிவித்துள்ளனர்.அதனால் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் கருதினால், முழு வீடியோ பதிவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம். தனிப்பட்ட முறையில் நடிகை த்ரிஷா மீது எந்த பகையும் இல்லை என தெரிவித்தார். 

இதையடுத்து, இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் என்ன கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம். சமூக வலைதளங்களால் இளைஞர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால், பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்பதை மன்சூர் அலிகானுக்கு தெரிவிக்க வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow