பொங்கல் பண்டிகை: பாவூர்சத்திரம் அரசு சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டி வாங்கி சென்றனர்

Jan 11, 2024 - 18:36
பொங்கல் பண்டிகை: பாவூர்சத்திரம் அரசு சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் அரசு சந்தையில் ஆடு விற்பனை அதிகளவில் நடைபெற்றது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளாக கடைபிடிப்பார்கள்.அன்றைய தினம் அசைவ பிரியர்கள் ஆடு, கோழி இறைச்சியை எடுத்து உணவுகள் தயார் செய்வதில் ஆர்வம் காட்டுவர்.இதனால் இறைச்சி கடைக்காரர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை இப்போதே வாங்கி வருகின்றனர். 

மேலும் சிலர் பொங்கலுக்கு மறுநாள் ஆட்டு கிடாய் வெட்டி இறைச்சியை குடும்பத்தினருடன் பங்கிட்டு கொள்வர்.இதனால் அவர்களும் ஆடு வாங்கி வருகின்றார்கள்.இந்த நிலையில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு சந்தை வழக்கம் போல் இன்று வியாழக்கிழமை கூடியது.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், வியாபாரிகள். ஏராளமான ஆடுகள், மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அவற்றை இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டி வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. 

ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.மேலும் நாட்டு கோழிகள் அதிக அளவில் விற்பனையானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow