Pushpa 2 Teaser: அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ட்ரீட்… வெளியானது புஷ்பா 2 டீசர்… எப்படி இருக்கு?

அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2ம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Apr 8, 2024 - 12:12
Pushpa 2 Teaser: அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ட்ரீட்… வெளியானது புஷ்பா 2 டீசர்… எப்படி இருக்கு?

சென்னை: டோலிவுட் டாப் ஹீரோ அல்லு அர்ஜுன் இன்று தனது 4வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புஷ்பா 2 டீசரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

முன்னதாக புஷ்பா முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் திரையரங்குகளில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த முதல் படமாக புஷ்பா அமைந்தது. தெலுங்கு உட்பட பான் இந்தியா மொழிகளில் வெளியான இந்தப் படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. பக்கா கமர்சியல் மூவியாக உருவான புஷ்பா, மேக்கிங், பாடல்கள், பிஜிஎம், ஆக்‌ஷன் சீன்ஸ் உட்பட அனைத்திலும் செம்ம மாஸ் காட்டியது. அதேபோல் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்று கொடுத்தது. அதே பாணியில் புஷ்பா 2ம் பாகம் உருவாகியுள்ளதை தற்போது வெளியான டீசரில் பார்க்க முடிகிறது.  

முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என வெளியான நிலையில், இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற கேப்ஷனுடன் ரிலீஸாகிறது. அதாவது முதல் பாகம் புஷ்பா கேரக்டரில் அல்லு அர்ஜுன் எப்படி எழுச்சிப் பெறுகிறான் என உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியாகவுள்ள இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல், அல்லு அர்ஜுன் எப்படி செம்மரக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைவனாக விஸ்வரூபம் எடுக்கிறான் என்பது தான் ஒன்லைன். இதில் அல்லு அர்ஜுனுக்கும் ஃபஹத் பாசிலுக்கும் இடையேயான மோதல் முக்கியமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.  

இந்நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புஷ்பா 2 டீசருக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. சேலை கட்டிக் கொண்டு என்ட்ரியாகும் அல்லு அர்ஜுன், ஆக்‌ஷனில் மிரட்டியுள்ளார். இதனால் இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களுக்கு தரமான ஆக்‌ஷன் ட்ரீட் காத்திருக்கிறது. புஷ்பா 2 ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இன்று வெளியான டீசர் படத்துக்கு ஹைப் கொடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow