இந்தியா யு 19 அணியில் ராகுல் டிராவிட் இளைய மகனுக்கு இடம் 

பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் இந்திய யு 19 அணியில் இடம் பெற்றுள்ளார். 

Jun 11, 2026 - 17:50
இந்தியா யு 19 அணியில் ராகுல் டிராவிட் இளைய மகனுக்கு இடம் 
ராகுல் டிராவிட் இளைய மகனுக்கு இடம் 

இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ராகுல் டிராவிட் பங்களிப்பது என்பது முக்கியமானது. இந்திய கிரிக்கெட் அணியின் 'தடுப்பு சுவர்' என ராகுல் டிராவிட்டிற்கு சிறப்பு பெயரும் உண்டு. இந்திய அணி, இந்திய யு19 அணிகளுக்கு பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் திறம்பட செயல்பட்டு இருக்கிறார். 

கிரிக்கெட் ஜாம்பவான் என பெயர் எடுத்த ராகுல் டிராவிட் தனது இளைய மகன் இந்திய யு19 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்த இந்திய அணியில் 17 வயதான அன்வே டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டிகள் வரும் ஜூலை 4ல் தொடங்கி ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்வே டிராவிட் கர்நாடக யு19 அணியை வழிநடத்தி விநோ மன்கட் டிராபி தொடரில் காலிறுதி வரைக்கும் வந்தது. இதில் 6 போட்டிகளில் 220 ரன்கள் குவித்து கவனம் பெற்றார். இவர் முன்னதாக யு-19 பி அணியிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யு19 இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow