தேவாவின் மறைவுக்கு வராத இசைஞானி....குடும்பத்தில் சிக்கலா? வெளியான திடுக்?

தேனிசை தென்றல் தேவாவின் மறைவிற்கு இசைஞானி நேரில் அஞ்சலி செலுத்தாது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

Oct 26, 2026 - 15:21
Oct 26, 2026 - 15:47
தேவாவின் மறைவுக்கு வராத இசைஞானி....குடும்பத்தில் சிக்கலா? வெளியான திடுக்?

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் தேவா. கானா இசை என்றாலே நம்முடைய நினைவுக்கு முதலில் தோன்றுவது தேவாதான். தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவான்களாக ஒரு பக்கம் இளையராஜா, ரஹ்மான் என இருக்க, தனது கானா இசையின் மூலம் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தவர் தேவா.

குறிப்பாக, கர்நாடக இசைக்கு மத்தியில் தனது கானா இசையின் மூலம் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்து, பல ரசிகர்களின் மனதையும் வென்றார் தேவா.

1980 மற்றும் 90-களின் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் காதல், கிராமிய வாழ்க்கை, பிரிவு, ஏக்கம் எனப் பல்வேறு உணர்வுகளையும் தனது இசையால் கட்டிப்போட்டு, அவரது செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது.

இந்தச் சூழலில்தான், தேனிசைத் தென்றல் என்று அன்போடு அழைக்கப்படுகின்ற தேவாவின் இசை, தமிழ் சினிமாவில் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கத் தொடங்கியது.

இவரது இசையில் காதலை வெளிப்படுத்தும் மென்மையான பாடல்களும், அதன் மறுபுறம் திரையரங்கையே உற்சாகப்படுத்தும் குத்துப்பாடல்களும் இடம்பெற்றன. சென்னையின் கானா இசையைத் தமிழ் சினிமாவின் பிரதான இசை உலகுக்கு எடுத்துச் சென்றதில் தேவாவுக்குப் மிகப்பெரிய பங்கு உண்டு.

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில், பேருந்தில் பயணிக்கும் ஒரு காட்சியில் “ராசி தான் கை ராசி தான்” பாடல் ஒலிக்கிறது. அப்போது ஒருவர், “ராஜா ராஜாதான்” என்றும், மற்றொருவர், “ராஜா ராஜாதான், ஆனா இது தேவா பாட்டு” என்றும் சொல்வது இடம்பெற்றது. இந்த வசனம் தேவாவின் நீண்டகால ஏக்கத்துக்கு ஒரு பதிலாக இருந்ததாக அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் கானக் குயிலின் குரல் அக். 17-ம் தேதி காற்றோடு காற்றாக மறைந்துவிட்டது.

தேவாவின் மறைவுக்கு இசைஞானி இளையராஜா நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இளையராஜாவும் தேவாவும் ஒரு வகையில் குடும்ப உறவினர்களாகவும், சம்பந்தி முறையிலும் இருப்பதால், ஏதேனும் குடும்பப் பிரச்சினைகள் ஏற்பட்டதால்தான் அவர் நேரில் அஞ்சலி செலுத்தவில்லையோ என்ற கேள்விகள் எழுகின்றன.

இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் மகன் பார்த்தி பாஸ்கர், தேவாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், இதனால் இரு குடும்பத்தினருக்கும் சம்பந்தி உறவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இசைஞானி நேரில் அஞ்சலி செலுத்தாததற்கான காரணம் என்னவென்று ஆராயும்போது, இருவருக்கும் இடையிலான குடும்பச் சர்ச்சைதான் காரணம் என்று பேசப்பட்டு வருகிறது.

குடும்பச் சர்ச்சையால்தான் நேரில் அஞ்சலி செலுத்தவில்லையா? வெறும் இசைப் பயணங்களை மட்டும் ரத்து செய்தால் போதுமா? நேரில் அஞ்சலி செலுத்த வேண்டாமா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow