குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்..தரிசனம் செய்ய குடும்பத்தோடு ரத்தினமங்கலம் வாங்க

ரத்தினமங்கலம் குபேரபகவானுக்கு வரும் 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Jun 26, 2024 - 15:18
குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்..தரிசனம் செய்ய குடும்பத்தோடு ரத்தினமங்கலம் வாங்க

சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரை அடுத்து ரத்தினமங்கலம் என்ற சிற்றூரில், 4,000 சதுர அடி பரப்பளவில் 5 அடுக்கு கோபுரத் துடன் அமைந்துள்ள குபேர பகவான் கோயில், இந்தியாவிலேயே குபேரனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயிலாக போற்றப்படுகிறது.

கோயில் மூலவர் குபேர பகவான், மனைவி சித்ரலேகாவுடன் வலது கையில் பதுமநிதி மற்றும் இடது கையில் சங்கநிதி கொண்டு அருள்பாலிக்கிறார். குபேரன் விக்கிரகத்துக்கு மேலாக லட்சுமி அமர்ந்துள்ளார். இக்கோயிலைச் சுற்றி லட்சுமி கணபதி, குபேரலிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர். அருகிலேயே கோசாலை உள்ளது.

நாம் திருப்பதி உண்டியலில் செலுத்தும் காணிக் கைகள் எல்லாம் குபேரனுக்கு வெங்கடாஜலபதி செலுத்தும் வட்டி மட்டுமே என்பது ஐதீகம். கலியுகம் எப்போது முடியப்போகிறதோ, அந்த தருணத்தில் குபேரனிடம் தனது கல்யாணத்திற்கு வாங்கிய கடனை வெங்கடாஜலபதி அடைத்து விடுவதாகவும் நம்பப்படுகிறது.

பெருமாளின் திருமணத்திற்கு கடன் கொடுத்த குபேரன் தனிக்கோவில் கொண்டுள்ள ரத்னமங்கலத்தில் ஆண்டுதோறும் குபேரன்-சித்ரலேகா திருக்கல்யாணம் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.இந்த தெய்வ திருக்கல்யாணம் வித்தியாசமான முறையில் நடத்தப்படுகிறது. நாம் திருமணத்திற்கு அச்சடிக்கும் அழைப்பிதழ் போலவே இக்கோவில் திருக்கல்யாண வைபவத்திற்கும் அழைப்பிதழ் அச்சடிக்கிறார்கள்.


பிரம்மதேவரின் கொள்ளுப்பேரனும், விஸ்ரவனின் மகனுமான குபேரனுக்கும், ரிதி என்ற சித்ரலேகாவுக்கும் ஜூன் 30ஆம் தேதி, காலை 9 மணி முதல் 11 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் ரத்தினமங்கலம், ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீலட்சுமி குபேரரை தங்கள் இல்லத்துக்கு அழைக்க விரும்புபவர்கள் ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 9176006176 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு அறியலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow