திருப்பதி வைகுண்ட ஏகாதசி சரிசனம் : ஒரே நாளில் 5 லட்சம் பேர் முன்பதிவு

திருப்பதியில் வைகுண்ட் ஏகாதசி சாமி தரிசனம் செய்ய, நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். டிச 1-ம் தேதி வரை முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளதால், இன்னும் பல லட்சகணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி வைகுண்ட ஏகாதசி சரிசனம் : ஒரே நாளில் 5 லட்சம் பேர் முன்பதிவு
Tirupati Vaikuntha Ekadashi Charisam

திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் விமர்சையாக நடைபெற உள்ளது.

சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்பட உள்ளது.

நவ 27-ம் தேதி நேற்று காலை 10 மணிக்குத் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குள் 2.16 லட்சம் பக்தர்கள் பதிவு செய்தனர். மாலைக்குள் மொத்தம் 4.60 லட்சம் பேர் பதிவு செய்தனர். இரவில் இந்த எண்ணிக்கை 5 லட்சம் ஆனது. டிசம்பர் 1 ஆம் தேதி வரை வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் 3 நாட்கள் தரிசனம் செய்யலாம்.

மேலும் சிறப்பு நுழைவு தரிசனங்கள் மற்றும் ரூ 300 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு டிசம்பர் 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். அன்றைய https://ttdevasthanams. ap. gov. in என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
திருப்பதி கோவிலில் நேற்று 59,548 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,781 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.54கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow