பும்ராவுக்கு ஓய்வு…கேஎல் ராகுல் நீக்கம்..! ராஞ்சி டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஞ்சி டெஸ்டில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Feb 21, 2024 - 10:49
பும்ராவுக்கு ஓய்வு…கேஎல் ராகுல் நீக்கம்..! ராஞ்சி டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஞ்சி டெஸ்டில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கும் நிலையில், வேலைப் பளுவை மனதில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

கடைசி 2 டெஸ்டுகளில் காயம் காரணமாக இடம்பெறாத கேஎல் ராகுலும் உடற்தகுதியை எட்டாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மூன்றாவது டெஸ்டில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஞ்சி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிராஜ் உடன் முகேஷ் அல்லது அறிமுக வேகப்பந்து வீச்சாளராக ஆகாஷ் தீப் களமிறங்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால், இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.   


 
ராஞ்சி டெஸ்டுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (வி), கேஎஸ் பரத் (வி), தேவ்தத் படிக்கல், ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

மேலும் படிக்க :

https://kumudam.com/Little-Kohli-is-here..-Virat-Kohli-has-a-baby-boy..-Do-you-know-the-name

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow