யாரும் தொட முடியாது! - சச்சின், ஸ்மித் சாதனையை முறியடித்த வில்லியம்சன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. முதல் டெஸ்ட் போட்டியை 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், ஹாமில்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி சாதனை படைத்தது.
* இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அபார சாதனைகளை படைத்துள்ளார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியம்சன் 133 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 172 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சனுக்கு, இது 32 சதமாக அமைந்தது. இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 32 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவருக்கு முன்பு:
ஸ்டீவ் ஸ்மித் [ஆஸ்திரேலியா] - 174 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் [ஆஸ்திரேலியா] - 176 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் [இந்தியா]- 179 இன்னிங்ஸ்
யூனிஸ் கான் [பாகிஸ்தான்] - 193 இன்னிங்ஸ்
* வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் 4ஆவது இன்னிங்ஸில் 5 சதம் விளாசியுள்ளார். முன்னதாக யூனிஸ் கான் மட்டுமே 5 சதங்களை எடுத்துள்ளது குறிப்பிட்டது. சுனில் கவாஸ்கர், ராம் நரேஷ் சர்வான், கிரீம் ஸ்மித் ஆகியோர் 4 சதங்கள் அடித்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
* டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் வில்லியம்சன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 8 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். முன்னதாக டான் பிராட்மேன் 12 போட்டிகளில் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.
* அதேபோல சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். டான் பிராட்மேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் மட்டுமே சொந்த மண்ணில் தொடர்ந்து 5 சதங்களை அடித்துள்ளனர்.
What's Your Reaction?