சென்னையில் மட்டும் இவ்வளவா? இதுவரை ரூ.1800 கோடி சொத்து வரி வசூல்!

இன்னும் வரி கட்டாத 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்க்ள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Apr 2, 2024 - 04:05
சென்னையில் மட்டும் இவ்வளவா? இதுவரை ரூ.1800 கோடி சொத்து வரி வசூல்!

சென்னை மாநகராட்சியில் மட்டும் இதுவரை ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், கடந்த நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகம் வசூலாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா 750 கோடி ரூபாய் என 1,700 கோடி ரூபாய் வரை வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 30-ம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்துவோருக்கு 5 சதவீத முதல் ரு.5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், இதுவரை சென்னையில் சொத்து வரி 1800 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, கடந்த நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1700 கோடி இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் மேலும் 100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் வரி வசூல் - ரூ.533 கோடி பெறப்பட்டுள்ளது, அதில் கடந்த நிதியாண்டை விட ரூ.10.71 கோடி அதிகம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை  வரி வசூல் நடைபெற்றதாக கூறியுள்ள அதிகரிகள், இம்மாதம் 30-க்குள் செலுத்தினால் தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்,  1 சதவீதம் தனி வட்டியுடன் வரித்தொகையை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இவ்வாறு சொத்து வரி செலுத்தாதோர் குறித்த பட்டியலை, மாநகராட்சி https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டும் வருகிறது. குறிப்பாக மொத்தமுள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 8.50 லட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துவார்கள், அதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வரி  செலுத்துவதில்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow