சேலம்: தலையை துண்டித்து நடுரோட்டில் வைத்து சென்ற நபர்-போலீசார் விசாரணை

போதையில் நடந்த கொலை என்றாலும், இவ்வளவு கொடூரமாக வெட்டி ரோட்டில் தலையை வைப்பது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளனர்

Nov 30, 2023 - 15:43
Nov 30, 2023 - 15:44
சேலம்: தலையை துண்டித்து நடுரோட்டில் வைத்து சென்ற நபர்-போலீசார் விசாரணை

சேலம் அருகே தொழிலாளியின் தலையை துண்டித்து நடுரோட்டில் வைத்து சென்றவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம்-பேரூர் ரோட்டில் உள்ளது குள்ளம்பட்டி.இங்கு தமிழநாடு அரசின் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. பல பேர் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பார்கள். அதை பெரிதாக யாரும் எடுத்து கொள்ள மாட்டார்கள்.

இதேபோல் குள்ளம்பட்டியில் குக்கிராமத்துக்கு செல்லும் பிரிவு ரோட்டில் விநாயகர் கோயில் ஒன்று இருக்கிறது.அந்த கோயில் முன்னாடி நேற்று இரவு சுமார் 8 மணிக்கு 40 வயதுடையவரின் தலை ஒன்று தனியாக கிடந்தது. முதலில் குடிகாரர்கள் ஏதோ பொம்மையை போட்டுவிட்டு போயிருக்கார்கள் என்று நினைத்திருக்கின்றனர் பொதுமக்கள். 

பிறகு தலையில் இருந்து ரத்தம்  சொட்டு, சொட்டாக விழுந்து கொண்டிருப்பதை பார்த்து விழுந்தடித்து காரிப்பட்டி போலீசுக்கு போன் செய்திருக்கிறார்கள் மக்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் தலை மட்டும் தனியாக இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கொலையாளி யார் என்பதை தேடும் பணி தொடங்கியது.

முண்டம் இங்கே? உடல் எங்கே? என்று பக்கத்து கிராமங்களில் எல்லாம் போலீசார் தேடினர்.இரவு 12 மணிக்கு மேலும் தேடும் படலம் தொடங்கியது. இரவு 1 மணிக்கு பக்கத்திலுள்ள நாட்டமங்கலம் ஏரியில் தனியாக கிடந்த உடலை கைப்பற்றி போலீஸ் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு கொலையாளியை தேடி பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். திருமலை என்ற லோக்கல் இளைஞரை போலீஸ் சந்தேகபட்டு பிடித்தனர்.
போலீசாரிடம் பேசினோம்.' திருமலை இன்னமும் போதை மயக்கத்திலே இருக்கான்.அவன்கிட்ட இன்னும் விசாரிக்கல.போதையில நடந்த கொலை என்றுதான் நினைக்கிறோம். செத்தவர் யாரென்று இன்னும் தெரியவில்லை.அதையும் விசாரித்து வருகிறோம். ' என்றார்கள். 

போதையில் நடந்த கொலை என்றாலும், இவ்வளவு கொடூரமாக வெட்டி ரோட்டில் தலையை வைப்பது எப்படி.இதை பார்த்த குழந்தைகள் எல்லாம் இன்று ஸ்கூலுக்கு போகலன்னு அடம்பிடிக்கிறாங்க.டாஸ்மாக்லதான் இவ்வளவு பிரச்சினையும். அதை அரசாங்கம் நிப்பாட்டுனும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow