ஏன் சைதன்யாவை பிரிஞ்சீங்க..?  கமெண்டில் சீண்டிய ரசிகர்.. நெத்தியடி பதில் கொடுத்த சமந்தா..!

Feb 16, 2024 - 17:00
ஏன் சைதன்யாவை பிரிஞ்சீங்க..?  கமெண்டில் சீண்டிய ரசிகர்.. நெத்தியடி பதில் கொடுத்த சமந்தா..!

நடிகை சமந்தா.. கணவரை பிரிந்து ஆண்டுகள் உருண்டோடினாலும், அவரே அதனை மறந்து தனது அடுத்தக்கட்ட வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினாலும், அவரது ரசிகர்கள் அந்த பிரிவை பற்றியும், அவரது காதல், திருமணம், பிரிவு குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில கேள்வி எழுப்புவதும், அதற்கு சமந்தா பதில் அளிப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது. 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்து, சினிமா பின்புலம் இன்றி சினிமாவில் மெது மெதுவாக உள்நுழைந்து இன்று முன்னணி நடிகையாக நிமிர்ந்து நிற்கிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். 

அப்போது ஏற்பட்ட காதலின் விளைவாக கடந்த 2017-ம் ஆண்டு பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.. சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி என்ற வரிசையில் சமந்தா-நாக சைதன்யா ஜோடியும் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களது காதல் திருமணம வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 

இவர்களது திருமணம் நடந்த மறு வருடத்தில் இருந்தே இருவரும் பிரிய இருப்பதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. ஆனால் இவை எதற்குமே இருவரும் எவ்வித பதிலும் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், சமந்தா தனது சமூக வலைதளத்தில் இருந்து நாக சைதன்யாவின் குடும்ப பெயரை நீக்கியது முதல், இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது புலப்பட்டது. 

முறைப்படி 2021-ம் ஆண்டு இருவரும் தாங்கள் சட்டப்படி பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அவர்களது ரசிகர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆகியும், இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கத் தொடங்கியும் ரசிகர்கள் இதனை விட்டப்பாடில்லை. இதற்கிடையில் மயோசிடிஸ் என்ற அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சில காலம் மருத்துவமனையிலேயே இருந்த சம்ந்தா மெல்ல, மெல்ல அதிலிருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார். 

உடற்பயிற்சியில் ஆர்வம் அதிகம் கொண்ட சமந்தா தனது ரசிகர்களுக்காக சில டிப்ஸ்களை பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்த நபர் ஒருவர், ”உங்கள் கணவரை நீங்கள் ஏன் பிரிந்தீர்கள்? வாழ்க்கையில் தோல்வியுற்ற உங்களின் அட்வைஸ் எங்களுக்கு தேவையில்லை” என பதிவிட்டுள்ளார். இதற்கு சாந்தமாக பதில் கூறியுள்ள சமந்தா, ”இவ்வளவு வெறுப்புகளை உங்களிடம் உருவாக்கும் நோயிலிருந்து நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்பதை நம்புகிறேன்” என கூறியுள்ளார். இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது ஆதரவை சமந்தாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow