கல்யாணம் முடித்து ஏமாற்ற முடியாது..! வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு செக்..! புதிய உத்தரவு அமல்..!
பெண்களை அதிகமாக பாதிக்கும் மோசடித் திருமணங்கள் நடைபெறுவதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் திருமணங்களை இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயம் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு இந்தியர்கள் திருமண சிக்கல்கள் தொடர்பான அறிக்கையை சட்ட அமைச்சகத்திடம் சட்ட ஆணையத் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ரிதுராஜ் அளித்தார். இந்நிலையில் அறிக்கையின்படி, குடியுரிமை இல்லாத இந்தியர்கள், இந்தியர்களை திருமணம் செய்துகொள்ளும் போது பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் ஆபத்தான சூழலில் தள்ளப்படும் போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணப் பதிவு மசோதா 2019ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதையும் சட்ட ஆணையம் சுட்டிக்காட்டியது.
இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமக்கள், இந்தியர்களுக்கு இடையேயான திருமணங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?