குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு.... உ.பி.யில் சோக சம்பவம்..

Feb 24, 2024 - 18:00
குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு.... உ.பி.யில் சோக சம்பவம்..

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், கஸ் கஞ்ச் பகுதியில் மகா பூர்ணிமாவையொட்டி கங்கை நதியில் புனித நீராடுவதற்காக இன்று(பிப்.24) காலை டிராக்டரில் ஏராளமானோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் மீது டிராக்டர் மோதமல் இருக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் குளத்தில் கவிழ்ந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் 7 சிறுவர்கள் உள்பட 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Goodbye-to-Congress...-Vijayatharani-joined-BJP

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow