அண்ணன் வழியில் தம்பி - காலிறுதியில் சாதனை படைத்த முஷீர் கான்..!

Feb 24, 2024 - 16:37
Feb 25, 2024 - 09:43
அண்ணன் வழியில் தம்பி - காலிறுதியில் சாதனை படைத்த முஷீர் கான்..!

ரஞ்சிக் கோப்பையில் பரோடாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், சர்ஃபராஸ் கானின் தம்பி முஷீர் கான் புதிய சாதனையை படைத்துள்ளார்.

மும்பையில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, 384 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பரோடா சுழற்பந்து வீச்சாளர் பார்கவ் பட்டின் சுழலை சமாளிக்க முடியாமல் மும்பை விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிந்தனர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடிய முஷீர் கான், முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். தொடர்ந்து கீழ் வரிசை பேட்டர்கள் கைகொடுக்க, இரட்டை சதம் அடித்தார்.

இதன் மூலம், மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த மும்பை வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.  1996-97 ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிராவுக்கு எதிராக இரட்டை சதமடித்த வாசிம் ஜாஃபர், முதல் இடத்தில் உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முஷீர் கான் இரண்டாவது இடத்தில் உள்ளார்; 2 சதங்கள், 1 அரைசதத்துடன் 360 ரன்கள் குவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கான், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, முதல் டெஸ்டிலேயே இரண்டு அரைசதங்கள் அடித்த நிலையில், அவருடைய சகோதரர் முதல் தர கிரிக்கெட்டில் சாதித்திருப்பது,  மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க : 

https://kumudam.com/A-six-in-the-last-ball...Mahalir-Mumbai-Indians-teams-pollard...Who-is-this-Sajeevan-Sajan

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow