எந்த போட்டியில் தோனி களமிறங்குவார்? சிஎஸ்கே அணி நிர்வாகம் புது அப்டேட்
7 போட்டிகளில் தோனி களமிறங்காத நிலையில், எந்த போட்டியில் விளையாடுவார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் புதிய தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தற்போது தசைப்பிடிப்பு (Calf Strain) காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஏழு போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இருப்பினும், தோனி தற்போது வலைப் பயிற்சிகளுக்கு ஈடுபட்டு வருகிறார். சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ள வீடியோக்களில் அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வது மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இருந்தபோதிலும், அவர் இன்னும் 100% உடல் தகுதியை எட்டவில்லை என்பதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி, தோனியின் உடல்நிலை குறித்து கூறுகையில், தோனி மிக வேகமாக குணமடைந்து வருகிறார். விரைவில் களத்திற்குத் திரும்ப அவர் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்பட்டாலும், ரன்கள் எடுப்பதற்காக வேகமாக ஓடுவதே தற்போதைய முக்கிய சவாலாக உள்ளது
இன்னிங்ஸின் இறுதியில் ஒன்றிரண்டு ரன்களுக்காகத் தீவிரமாக ஓட வேண்டியிருக்கும் போது, தசைப்பிடிப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதில் அணி நிர்வாகம் கவனமாக உள்ளது. எனவே, மேலும் சில போட்டிகளில் தோனி சில போட்டிகளில் விளையாட வைக்க வேண்டாம் என சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?