மீண்டும் களத்துக்கு வந்த ஸ்ரேயஸ், இஷான் கிஷான்?

Feb 28, 2024 - 12:10
மீண்டும் களத்துக்கு வந்த ஸ்ரேயஸ், இஷான் கிஷான்?

ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மும்பை பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்த விக்கெட் கீப்பர்- பேட்டர் இஷான் கிஷன், மும்பையில் நடைபெறும்   டிஒய் பாட்டில் டி20 போட்டியில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடவுள்ளார்.

ராஞ்சி டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற பசியுடன் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிப்போம் என்று கூறினார்.

முன்னதாக, ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகியது சர்ச்சையை கிளப்பியது. முதுகு தசைப் பிடிப்பு காரணமாக காலிறுதி ஆட்டத்தில் இருந்து விலகுவதாக ஸ்ரேயஸ் அறிவித்தார். ஆனால், தேசிய கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த உடற்தகுதி நிபுணர், ஸ்ரேயஸ் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஸ்ரேயஸ் உண்மையை மறைத்ததாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். இப்போது, மீண்டும் உள்ளூர் போட்டிக்கு ஸ்ரேயஸ் திரும்பியுள்ள நிலையில், மார்ச் 22-ல் தொடங்கும் ஐபிஎல் போட்டிக்கான தயாரிப்புக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Early-Admissions...Department-of-School-Education-has-announced

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow