மீண்டும் 1 லட்சத்தை நெருங்கம் சவரன் : கிராமுக்கு ரூ 80 உயர்வு: வெள்ளி விலை புதிய உச்சம்
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து, வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்து வருகிறது. தங்கம் சவரனுக்கு 1 லட்ச ரூபாயை நெருங்கி வரும் நிலையில், வெள்ளியும் கிலோ ரூ 5 ஆயிரம் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை ஆகிறது. மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளிரூ.2.31 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.வார தொடக்க நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் கண்டு இருப்பது. முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைமாதம் முகூர்த்தமாதம் என்பதால், கிராம் தங்கம் ரூ 15 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 1 லட்ச ரூபாயை தாண்டி சவரன் தங்கம் விற்பனை ஆகக்கூடும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?

