ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா.. சென்னையிலிருந்து கோவை, கன்னியாகுமரிக்கு ஸ்பெஷல் ரயில்கள் இயக்கம்
lok sabha election 2024, special trains, tamil nadu, Chennai, லோக்சபா தேர்தல் 2024, மக்களவைத் தேர்தல் 2024, சிறப்பு ரயில்கள், சென்னை
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் வரும் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்காக சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வெளியூரில் தங்கி பணியாற்றுவோர் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்வார்கள். அவர்களிள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் வழக்கமாக இயக்கப்படும் இரண்டாயிரத்து 92 பேருந்துகளுடன் கூடுதலாக இரண்டாயிரத்து 970 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, இன்று புதன்கிழமையும் நாளைய தினம் வியாழக்கிழமையும் மொத்தம் 7 ஆயிரத்து 154 பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன. மேலும், பிற ஊர்களில் இருந்தும் மூவாயிரத்து 60 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் இருந்து கோவைக்கும் வரும் வியாழக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நாளைய தினம் (18-04-2024) வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ( 20-04-2024) மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் முறையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணிக்கு சென்றடைய இருக்கிறது.
மறு மார்கத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாளான (19-04-2024) வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், சனிக்கிழமை காலை 10.05 மணிக்கு எழும்பூரை வந்தடைய இருக்கிறது. இதே ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை 10.05 மணிக்கு எழும்பூரை வந்தடைய இருக்கிறது.
What's Your Reaction?