உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை.. தமிழ்நாட்டை தொடர்ந்து ஒடிசா அறிவிப்பு!
கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு இறுதிச்சடங்கில் முழு அரசு மரியாதை செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்திருக்கிறார்.
இறுதிச் சடங்குக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்யும் என்றும், உடல் உறுப்பு தனம் செய்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறுகையில், "மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும் குடும்பத்தாரின் செயல் போற்றத்தக்கது.அவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.மேலும் ஒடிசா அரசு 2020 முதல் உடல் தானம் செய்பவர்களுக்கு சூரஜ் விருதை வழங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார். உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உறுப்பு தானம் அதிகம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் ஒடிசாவும் இடம் பெறும்" என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?