ஜிம்பாப்வே டி20: சுப்மன் கில் கேப்டன்... நடராஜனை ஓரம்கட்டிய பிசிசிஐ... கொந்தளிக்கும் ரசிகர்கள்!

வாய்ப்பு கிடைத்தபொதெல்லாம் தனது திறமையை நிரூபித்த நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை? என்று பிசிசிஐக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனையும் பிசிசிஐ அணியில் எடுக்கவில்லை

Jun 24, 2024 - 20:12
ஜிம்பாப்வே டி20: சுப்மன் கில் கேப்டன்... நடராஜனை ஓரம்கட்டிய பிசிசிஐ... கொந்தளிக்கும் ரசிகர்கள்!
தமிழ்நாடு வீரர் நடராஜன்

டெல்லி: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி கேப்டனாக இளம் வீர்ர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீரர் நடராஜன் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலக்க்கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி ஜூலை 6ம்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்பட டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் அனைத்து வீர்ர்களுக்கும் ஜிம்பாப்வே டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் இளம் வீர்ர்கள் கொண்ட அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீர்ர் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான் ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் கலக்கிய துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், அபிஷேக் சர்மா, கலீல் அகமது துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

அதே வேளையில் ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக பந்துவீசிய தமிழ்நாடு வீரர் நடராஜனை பிசிசிஐ அணியில் சேர்க்கவில்லை. தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றாலும் சமீப காலமாக அவர் சரியாக விளையாடவில்லை. 

ஆனால் வாய்ப்பு கிடைத்தபொதெல்லாம் தனது திறமையை நிரூபித்த நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை? என்று பிசிசிஐக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனையும் பிசிசிஐ அணியில் எடுக்கவில்லை. இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்களை பிசிசிஐ புறக்கணிப்பது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜிம்பாப்வே டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியல்:- சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow