காலேஜ் ஸ்டூடண்ட்களுக்கு ஸ்வீட் நியூஸ் : ஜனவரி 5-ம் தேதி இலவச லேப்டாப் வழங்க திட்டம் ?
காலேஜ் ஸ்டூடண்ட்களுக்கு இலவச லேப்டாப் ஜனவரி 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்கி துவக்கி வைக்கவுள்ளதாக தெரிகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது பெரும் வரவேற்பை அளித்தது. எனினும் இந்தத் திட்டம், திமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.
2025-2026 தமிழக பட்ஜெட்டில் மிக அமைச்சர் தங்கம் தென்னரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத இதனை நிறைவேற்றும் பணியில் தமிழக அரசும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தது.
முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டது. அதற்கு ஏற்ப மூன்று நிறுவனங்களும் இருந்து தமிழக அரசு கொள்முதலும் செய்தது. பிரபல லேப்டாப் நிறுவனங்களான dell, acer, HP ஆகியவற்றின் மூலம் தமிழக அரசு லேப்டாப் விலை கொள்முதல் செய்தது.
ஜனவரி முதல்வாரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இலவச லேப்டாப் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கி துவங்கி வைக்க உள்ளார்.
What's Your Reaction?

