வாக்குப்பதிவு முடிவதற்குள் சூழ்நிலை மாறும்.. ஹெச்.ராஜா நம்பிக்கை

Apr 4, 2024 - 21:37
வாக்குப்பதிவு முடிவதற்குள் சூழ்நிலை மாறும்.. ஹெச்.ராஜா நம்பிக்கை

வாக்குப்பதிவு முடிவதற்குள் பாஜக வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சியினர் அரசியலில் சம்பாதித்த பணத்தை தனிநபர் பெயரில் கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகையாக வைத்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். திமுகவின் ஊழல் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருப்பதாக அவர் சாடினார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளித்த ரூ.5,900 கோடிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்டும், தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை எனவும், இத்தகைய ஊழல் திமுக அரசை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  மேலும் மக்களவைத் தேர்தலில் 10 மாநிலங்களில் காங்கிரஸ் பூஜ்யம் பெறும் எனவும், தமிழ்நாட்டில் திமுக பாதி இடங்களில் கூட வெற்றி பெறாது எனவும் கருத்துக்கணிப்பு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஹெச்.ராஜா, வாக்குப்பதிவு முடிவதற்குள் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow