+2 இயற்பியல் வேதியியலில் செண்டம் மதிப்பெண் சரிவு.. தமிழ், கணிதத்தில் சதமடித்த மாணவர்கள் அதிகம்

ப்ளஸ் 2வில் முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், படங்களில் கடந்த ஆண்டு காட்டிலும் நூறு சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. தமிழ் படத்தில் கடந்தாண்டு இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்ற நிலையில் இந்த ஆண்டு அது 35 ஆக அதிகரித்துள்ளது.

May 6, 2024 - 15:01
+2 இயற்பியல் வேதியியலில் செண்டம் மதிப்பெண் சரிவு.. தமிழ், கணிதத்தில் சதமடித்த மாணவர்கள் அதிகம்

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 94.56 சதவிகித மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32 சதவிமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ப்ளஸ் 2வில் முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், படங்களில் கடந்த ஆண்டு காட்டிலும் நூறு சதவீத மதிப்பெண் பெற்ற  மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. 

கணிதம் , கணினி அறிவியல் , விலங்கியல் பாடங்களில் மட்டும் கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு கணிசமான எண்ணிக்கையில் 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 812 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்தனர் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 633 என சரிந்துள்ளது

வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டு 3909 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்தனர் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 471 என சரிந்துள்ளது

உயிரியல் பாடத்தில் கடந்த ஆண்டு 1494 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்தனர் அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 652 என சரிந்துள்ளது

அதே நேரத்தில் கணித பாடத்தில் கடந்த ஆண்டு  690 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றனர் அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 2587 ஆக உயர்ந்துள்ளது

அதேபோல கணினி அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 46 18 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றனர் இந்த ஆண்டு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து 696 என அதிகரித்துள்ளது

அதேபோல விலங்கியல் பாடத்தில் கடந்த ஆண்டு 154 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை 382 என இந்த ஆண்டு அதிகரித்துள்ளது அதிகரித்துள்ளது

அதேபோல தமிழ் படத்தில் கடந்தாண்டு இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்ற நிலையில் இந்த ஆண்டு அது 35 ஆக  அதிகரித்துள்ளது.

ஆங்கில பாடத்தில் கடந்த ஆண்டு 15 மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்ற நிலையில் இந்த ஆண்டு அந்த  எண்ணிக்கை 7 என சரிந்துள்ளது

இதனிடையே இன்றைய தினம் அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு அறிக்கையினை வழங்கி வாழ்த்துகள் பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow