பொறியியல் படிப்புகள்.. இன்று முதல் விண்ணப்பம்.. கட் ஆஃப் மார்க் குறையுமா? கல்வியாளர்கள் சொல்வதென்ன?
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள், 3 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் ஒரு திருநங்கை உட்பட ஏழு லட்சத்து 72,000 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எதிர்கொண்டனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வகளும் அடங்குவர்.அந்த வகையில் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இந்நிலையில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்;
ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு 1500; எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினருக்கு 250 பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு பொறியியல் படிப்பு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் முதல் வாரம் பொறியியல் படிப்பு கலந்தாய்வு துவங்கும் இந்த நிலையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பொறியியல் படிப்பு கட் ஆஃப் சற்று குறையும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்
இயற்பியல் வேதியியல் பாடங்களில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 100சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதும் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுவதும் கட் ஆப் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?