2025 ஜூனில் 2வது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

Mar 16, 2024 - 13:50
2025 ஜூனில் 2வது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்படும் என முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி; தொன்மை - தனித்தன்மை - பொதுமைப் பண்பு பண்பாடு - உயர்ந்த சிந்தனை - இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும். தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்"  என குறிப்பிட்டுள்ளார். 

நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனை செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow