மார்ச் 18-ல் தொடங்கும் பங்குனி உத்திர திருவிழா.. பழனி மலைக்கோயிலில் உழவாரப் பணிகள்..

சிவனடியார்கள் குழு உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது

Mar 16, 2024 - 13:37
மார்ச் 18-ல் தொடங்கும் பங்குனி உத்திர திருவிழா.. பழனி மலைக்கோயிலில் உழவாரப் பணிகள்..

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில், சிவனடியார்கள் குழுவினர் உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இந்த திருவிழா மார்ச் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, கோயிலில் உழவாரப் பணிகளை மேற்கொள்வதற்காக, அனைத்து சிவனடியார்கள் குழு சார்பில் 6,500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ரயில், பேருந்துகள் மூலம் அங்கு வந்துள்ளனர். அவர்கள், பழநி அடிவாரம், கிரிவலப் பாதை, படிப்பாதை, யானைப் பாதை, மலைக்கோயில் மேல்பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பழநி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வரை உழவாரப் பணிகள் நடைபெற உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow