தஞ்சாவூர்: அரசு மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு -வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
மருத்துவமனை வளாகம் சுற்றி மண்டி கிடைக்கும் புதர்செடிகளை அகற்றி தூய்மைபடுத்த வேண்டும்
தஞ்சை அருகே அரசு மருத்துவமனையில் புகுந்த பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவசர முதலுதவி சிகிச்சையும், உள் நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மழை பெய்து வருவதால் மருத்துவமனையில் பாம்பு ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மருத்துவமனை வளாகம் சுற்றிலும் அடர்ந்த புதர் செடிகளும், போதிய பராமரிப்பு இன்றி இருந்து வருகிறது.இதனால் கொசுக்களும், விஷ பூச்சிகளும், பாம்புகளும் மழைக்காலங்களில் மருத்துவமனை உள்ளே வர்உவதாகவும், மருத்துவமனை வளாகம் சுற்றி மண்டி கிடைக்கும் புதர்செடிகளை அகற்றி தூய்மைபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவமனையில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?