பள்ளிக்கு நிலம் வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்...குவியும் பாராட்டு...

பரமேஸ்வரியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொன்னாடை போர்த்தி கெளரவித்த நிலையில், பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Feb 27, 2024 - 09:38
Feb 27, 2024 - 10:23
பள்ளிக்கு நிலம் வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்...குவியும் பாராட்டு...

சிவகாசி அருகே சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு வழங்கிய அமெரிக்க வாழ் தமிழருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர்கள் குருசாமி - குருதேன்மொழி  தம்பதி. இவர்களுக்கு மணிவண்ணன் என்ற மகன் உள்ளநிலையில் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவிட்டதாக சொல்லப்படுகிறது.

தாய் - தந்தை இருவரும் காலமான நிலையில், எம்.புதுப்பட்டி கிராமத்தில், அவர்களுக்கு சொந்தமான சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை, மேல்நிலைப்பள்ளி பணிக்காகவும்,பள்ளி வளர்ச்சிக்காகவும் விருதுநகர் மாவட்ட கல்வித்துறைக்கு, மணிவண்ணன் தானமாக வழங்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, மணிவண்ணன் அவரது சித்தியான முன்னாள் தலைமை ஆசிரியை பரமேஸ்வரி மூலம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மூலம் நிலப் பத்திரங்களை வழங்கினார். தொடர்ந்து பரமேஸ்வரியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொன்னாடை போர்த்தி கெளரவித்த நிலையில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow