'மகளிர் உரிமைத் தொகை'க்கு அப்ளை பண்ணீங்களா?... உங்களுக்கு குட் நியூஸ்... சூப்பர் அறிவிப்பு!
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வென்றது. இதற்கு 'மகளிர் உரிமைத் தொகை' திட்டமும் ஒரு காரணம் என்று சொல்லலாம். மகளிர் உரிமைத் தொகையை பெற தமிழ்நாடு அரசு சில நிபந்தனைகளை விதித்து இருந்தது.
சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் பெண்களுக்கு என்று சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் வேலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த திட்டத்தின் மூலம் பேருந்து டிக்கெட் செலவை மிச்சப்படுத்தி அதனை வீட்டு செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடிகிறது என்று தெரிவித்தனர்.
இது தவிர பெண்களின் வாழ்வாரத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு மாதமாதம் அளிக்கும் ரூ.1,000 பேருதவியாக உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வென்றது. இதற்கு 'மகளிர் உரிமைத் தொகை' திட்டமும் ஒரு காரணம் என்று சொல்லலாம். மகளிர் உரிமைத் தொகையை பெற தமிழ்நாடு அரசு சில நிபந்தனைகளை விதித்து இருந்தது.
அரசு ஊழியர்களாக இருக்கும் குடும்ப தலைவிகள், அரசு ஓய்வவூதியம் பெறும் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என அரசு அறிவித்ததது. ஆனால் தகுதிவாய்ந்த பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம். அரசு அதை பரிசீலித்து முடிவு செய்யும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதிய விண்ணப்பதாரர்களின் நிலை குறித்து திட்ட செயலாக்கத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்டது.
அதாவது மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அதுதொடர்பான விவரங்கள் அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர்கள் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?