’அந்தரத்தில் தொங்கிய பெண்கள்..பாதுகாப்பற்ற கலைஞர் பூங்கா..’ இபிஎஸ் கண்டனம்
புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைனில் இரண்டு பெண்கள் 20 நிமிடத்திற்கு மேலாக அந்தரத்தில் தொங்கியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைனில் இரண்டு பெண்கள் 20 நிமிடத்திற்கு மேலாக அந்தரத்தில் தொங்கியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அண்மையில் 46 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஜிப் லைன் எனப்படும் அந்தரத்தில் செல்லும் ரோப் காரில் சற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.
இதில் பயணித்த இரண்டு பெண்கள் 20 நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கியதால் கூக்குரலிட்டு அழத் தொடங்கினர். இதையடுத்து இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் பழுதடைந்திருக்கிறது என்றும் மக்களின் உயிரோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
What's Your Reaction?






