உணவில் கண்ணாடி துண்டு கிடந்தால் அதிர்ச்சி.. நல்வாய்ப்பாக தப்பிய சிறுவன்

பிரபல சைவ உணவகத்தில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் கண்ணாடித் துண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உணவில் கண்ணாடி துண்டு கிடந்தால் அதிர்ச்சி.. நல்வாய்ப்பாக தப்பிய சிறுவன்
சாம்பார் சாதத்தில் கண்ணாடித் துண்டு - பெற்றோர் ஊழியர்களிடம் வாக்குவாதம்

திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் இயங்கிவரும் பொன்ராயர் என்ற பிரபலமான சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் வாடிக்கையாளர் தனது குடும்பத்துடன் உணவருந்த வந்துள்ளனர்.

அப்போது பெற்றோர்கள் இருவரும் தங்களுக்கு சாப்பாடு ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களது மகனுக்கு சாம்பார் சாதம் ஆடர் செய்துள்ளனர். அந்த சாம்பார் சாதத்தை சிறுவன் பாதி சாப்பிட்ட நிலையில் பெரிய கண்ணாடி துண்டு ஒன்று இருந்துள்ளது.

அந்த கண்ணாடி துண்டு இருப்பதை கவனிக்காமல் சிறுவன் அந்த, தனது ஸ்பூன் வைத்து கண்ணாடி தூண்டின் மேல் தட்டி உள்ளான். இதனையடுத்து சத்தம் கேட்ட பெற்றோர் உடனடியாக சாம்பார் சாதத்தை பார்த்தபோது அதில் கண்ணாடி துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து சப்ளையரிடம் கேட்டபோது சப்ளையர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த வாடிக்கையாளர், உணவகத்தை விட்டு வெளியே வந்து, ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிரபல உணவகத்தில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் கண்ணாடி துண்டு இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow